மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த தன்னுடைய மனைவிக்கு, புதிதாக கட்டிய வீட்டின் புதுமனை புகுவிழாவில் மெழுகு சிலை வைத்து அசத்தியுள்ளார் கர்நாடாகவினைச் சேர்ந்த நபர்.
கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி அன்று, புதுமனைப் புகுவிழா ஒன்று நடைபெற்றது. அந்த வீட்டின் உரிமையாளரான ஸ்ரீநிவாஸ் மூர்த்தி என்பவர் தன்னுடைய மகள்களுடன் அந்த நிகழ்ச்சியினை கொண்டாடினார். அவருடைய மனைவி ஏற்கனவே, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார். சாலை விபத்தில் இறந்து போன மனைவியின் நினைவாக, இந்த வீட்டின் நடுவே அவருக்கு மெழுகில் செய்யப்பட்ட சிலையினை வைத்தார்.
பிங்க் நிற சேலைக் கட்டி, சோபாவில் சிரித்த முகத்துடன் அவருடைய மனைவியின் சிலை இருந்தது. இதனைப் பார்த்த அவருடைய உறவினர்கள், குழம்பிப் போயினர். இறந்த போன மாதவி எப்பொழுது உயிருடன் வந்தார் என கிசுகிசுத்தனர். நெருங்கிப் போய் பார்த்தப் பொழுது தான், அது மெழுகு சிலை எனத் தெரிந்தது. அதனைப் பார்ததும் அனைவரும் நெகிழ்ந்து போயினர்.
ஸ்ரீநிவாஸ மூர்த்தியின் மகள்கள் இருவரும் தன்னுடைய தாயின் சிலையுடன் இணைந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இந்த சம்பவம், இந்தியா முழுவதும் வைரலாகி வருகின்றது.