காஷ்மீர் கட்சிகள் கூட்டாக முடிவு! சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தால் போராட்டம்!

05 August 2019 அரசியல்
kashmirleaders.jpg

சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தால் கூட்டாக போராட்டம் நடத்துவோம் என, காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும், சேர்ந்து கூட்டாக முடிவு செய்துள்ளன.

தொடர்ந்து வீட்டுக் காவலில் எதிர்கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி, காஷ்மீரில் உள்ளக் கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவலில் இருப்பதால், அவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மேலும், காஷ்மீர் பகுதியில், பல ஆயிரம் இராணுவ வீரர்கள் குவிந்துள்ளனர். இதனால், நாடு முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, காஷ்மீரில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. 144 தடை உத்தரவும் பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஸ்ரீநகரில் உள்ள ஃபரூக் அப்துல்லாவின் இல்லத்தில், அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் காஷ்மீரின் முக்கியத் தலைவர்களான, மெஹபூபா முஃப்தி, ஓமர் அப்துல்லா, தாஜ் மொஹைதீன் ஆகியோரும், பிறத் தலைவர்களும் பங்கேற்றனர். அந்தக் கூட்டத்தில், ஜம்மூ-காஷ்மீர் பிரிக்கப்பட்டாலோ, சிறப்பு அந்தஸ்து ரத்தானாலோ, என்ன செய்ய வேண்டும் என விவாதித்தனர்.

HOT NEWS