காஷ்மீர் குங்குமப் பூவிற்கு, தற்பொழுது மத்திய அரசு புவிசார் குறியீட்டினை வழங்கி உள்ளது. இதற்கு, அம்மாநில ஆளுநர் நன்றி தெரிவித்துள்ளார்.
உலகளவில் பிரசித்திப் பெற்ற பொருளாக குங்குமப் பூ உள்ளது. இதற்கு, பலவித மருத்துவக் குணங்கள் உள்ளன. இதனை, மங்களகரமானப் பொருளாகவும் பொதுமக்கள் பார்க்கின்றனர். ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் விளைகின்ற, பிரசித்திப் பெற்றப் பொருளுக்கு மத்திய அரசு புவிசார் குறியீட்டினை வழங்கி வருகின்றது.
அந்த வகையில் தமிழகத்தின் பலப் பொருட்கள் இந்த புவிசார் குறியீட்டினைப் பெற்றுள்ளன. இவைகளைப் போல, காஷ்மீர் பள்ளத்தாக்குகளில் மட்டுமே விளையக் கூடிய குங்குமப் பூவிற்கு, புவிசார் குறியீடு வழங்கப்பட வேண்டும் என்று நீண்ட நாட்களாக, அம்மாநில மக்கள் கோரி வந்தனர்.
தற்பொழுது அதற்குப் பலன் கிடைத்துள்ளது. காஷ்மீர் குங்குமப் பூவிற்கு, மத்திய அரசு புவிசார் குறியீட்டினை வழங்கி உள்ளது. அதற்காக, அம்மாநில துணை நிலை ஆளுநர் ஜிசி முருமூ மத்திய அரசிற்கு நன்றிகளைத் தெரிவித்து உள்ளார். இதனால், குங்குமப்பூவிற்கு நல்ல விலைக் கிடைக்கும். வெளிநாடுகளுக்கு இதனை ஏற்றுமதி செய்யும் பொழுது, இதன் விலையானது அதிகளவில் உயரும் என்பதில் விவசாயிகளுக்கு பயன்கள் அதிகமாகவே கிடைக்கும்.