உறைந்து போனது காஷ்மீர் ஏரி! வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட்!

30 December 2019 அரசியல்
himalayas.jpg

கடும் குளிர் காரணமாக டெல்லி, உத்திரப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார், ஹரியானா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு, தேசிய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹரியானா மாநிலத்தில், இன்றும், நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜனவரி 1ம் தேதி முதல் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டும் உள்ளது. டெல்லியில், வாகனங்கள் காலையிலேயே, ஹெட்லைட்டினைப் போட்டுத் தான் ஓடுகின்றன. அதுவும், வேகமாக செல்ல இயலாத சூழ்நிலை நிலவுகின்றது. ஒரு சில மீட்டர்களுக்கு அப்பால் இருப்பவர்களைக் கூட காண முடியாத சூழ்நிலை நிலவுகின்றது. காலையில் தான் இப்படி என்றால், இரவில் சுத்தம். யார் எங்கு இருக்கின்றார்கள் என்பதுக் கூட காண முடியாத அளவிற்கு, கடும் குளிர் நிலவுகின்றது. இப்படிப்பட்ட கொடுமையான குளிரினை பார்த்ததில்லை என, அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

காஷ்மீரில் உள்ள டால் ஏரி உலகளவில் பிரசித்துப் பெற்றது. அந்த ஏரியானது, தற்பொழுது கடும் குளிரின் காரணமாக முற்றிலும் உறைந்து விட்டது. அதில், ஒரு சிலர் நடக்கின்றனர். இப்படியொரு குளிரினால், சாலையோரங்களிலும், வீடுகளிலும் குப்பைகளை கொழுத்தி, பொதுமக்கள் குளிர் காய்கின்றனர்.

HOT NEWS