கவின் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது!

18 March 2020 சினிமா
liftfirstlook.jpg

பிக்பாஸ்3 நிகழ்ச்சி மூலம், தமிழர்கள் அனைவர் மத்தியிலும் பிரபலமடைந்தவர் என்றால் அது கவின் மட்டுமே. பெரிய அளவில் அவர் அந்த நிகழ்ச்சியில் எதுவும் செய்யவில்லை. ஒரே ஒரு காதல் மட்டுமே செய்தார்.

அவர் தன்னுடைய சகப் போட்டியாளரான, லாஸ்லியாவினை காதலித்தார். பின்னர், எதுவும் செய்யவில்லை. ஆட்டத்தில் இருந்து விலகிவிட்டார். இருப்பினும், அவர் பிக்பாஸ்3 நிகழ்ச்சியினை விட்டு வெளியேறுவதற்குள், அவருக்கென ரசிகர்கள் வந்துவிட்டனர். அதனால், அவருக்கு பட வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஏற்கனவே, அவர் கதாநாயகனாக நடித்த திரைப்படம் சரியாக ஓடவில்லை. இந்நிலையில், தான் நடித்த படத்தின் பர்ஸ்ட் லுக்கினை தற்பொழுது அவர் வெளியிட்டுள்ளார். லிப்ட் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கானது, வெளியாகி உள்ளது. அதில், நடிகர் கவின் மற்றும் அமிர்தா ஐயர் உள்ளனர். சுற்றிலும், ரத்தமாக காணப்படுகின்றது.

இந்தப் படத்தினை ஈக்கா நிறுவனம் சார்பில் ஹேப்சி தயாரித்து உள்ளார். இதனை வினித் வரபிரசாத் என்பவர் இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் முக்கியத் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

HOT NEWS