கமல் மீது ஞானவேல் புகார்! 10 கோடி தர தயாரிப்பாளர் சங்கத்தில் முறையீடு!

26 September 2019 சினிமா
kamalhaasanissue.jpg

நடிகர் கமல்ஹாசன் மீது, ஸ்டுடியோ க்ரீன் ஓனர் திரு.ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார். உத்தமவில்லன் படத்திற்காக, கமல்ஹாசன் 10 கோடி தர வேண்டும் எனக் கூறியுள்ளார்.

உத்தமவில்லன் பட வெளியீட்டின் பொழுது, ஏற்பட்ட சிக்கலைத் தீர்க்க 10 கோடி கேட்டதாகவும், அதற்காக தம்முடைய நிறுவனப் படத்தில் நடித்துத் தருவதாகவும் கூறியுள்ளார். ஆனால், 4 ஆண்டுகள் ஆகியும் படம் நடித்துத் தரவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், கமல்ஹாசன் தரப்பு கூறுகையில், நாங்கள் லிங்குசாமியிடம் தான் பேச்சு நடத்தினோம். மேலும், நாங்கள் எவ்வித உத்திரவாதமும் தரவில்லை என்று கூறியுள்ளனர்.

HOT NEWS