ஞானவேல் ராஜாவினை கைது செய்ய இடைக்காலத் தடை!

09 August 2020 சினிமா
kegnanavelraja.jpg

சினிமா தயாரிப்பாளர் கேஇ ஞானவேல் ராஜாவினைக் கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து, நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணித் தயாரிப்பாளர்களில் ஒருவரான கேஇ ஞானவேல் ராஜா பண மோசடியில் ஈடுபட்டதாக, அவர் மீது புகார் போலீசில் அளிக்கப்பட்டது. நீதிமணி, மேனகா, ஆனந்த் ஆகியோர் ஞானவேல் ராஜா மீது, 3 கோடி ரூபாயினை ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்தனர்.

அதனடிப்படையில் அவரை விசாரிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்படாமல் இருப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஞானவேல் ராஜா முன்ஜாமீன் பெற்றார். அவர் தன்னுடைய மனுவில், மகாமுனி திரைப்படத்திற்காக ஆறு கோடியே 25 லட்ச ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டதாகவும், அதில் நீதிமனியுடன் என்னையும் சேர்த்து பண மோசடி செய்துள்ளதாக, தவறானப் புகார் எழுந்துள்ளது எனவும் கூறியுள்ளார்.

இதனை அடுத்து, வருகின்ற 14ம் தேதி வரை, அவரைப் போலீசார் கைது செய்யத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

HOT NEWS