கீழடியை அடுத்து, மேலும் பல இடங்களில் ஆய்வுக்கு அனுமதி!

31 October 2019 அரசியல்
keeladi.jpg

தமிழகத்தின் கீழடியில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியினை அடுத்து, மேலும் பல இடங்களில், தொல்லியல் ஆய்வு நடத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

உலகிலேயே வைகை கரை நாகரீகமே, மிகவும் தொன்மையான நாகரீகம் என்பதை நிரூபிக்கும் விதமாக, கிமு 2500ம் ஆண்டினைச் சேர்ந்த பொருட்கள் தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மேலும் நான்கு இடங்களில் தொல்லியல் அகழ்வாய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்த அனுமதி அடுத்த செப்டம்பர் 30ம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு ஆண்டு வழங்கப்பட்டுள்ள இந்த அனுமதியில் சிவகங்கையின் கீழடி, ஆதிச்சநல்லூர், சிவரக்காளை, ஈரோட்டில் உள்ள கொடுமணல், போன்ற பகுதிகளில் ஆய்வு நடக்க உள்ளது. விரைவில், இப்பகுதிகளில் ஆய்வுப் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

HOT NEWS