சிந்து சமவெளியை தூக்கி சாபிட்ட கீழடி நாகரிகம்!

22 September 2019 அரசியல்
keeladi4.jpg

கீழடியில் நடத்தப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சியின் தகவல்கள், தற்பொழுது இந்திய வரலாற்றினையே மாற்றும் அளவிற்கு, ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாய்வில், 2600 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இது சிந்து சமவெளி காலத்திற்கு முற்பட்டதாக தமிழ் இனம் உள்ளது என்பதை, வெட்ட வெளிச்சமாக உணர்த்தியுள்ளது.

இந்த கீழடியில் கிடைத்தப் பொருட்களை, அமெரிக்காவில் ஆராய்ச்சிக்காக, அனுப்பி வைக்கப்பட்டன. அவைகளின் மூலம் இந்த தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த ஆராய்ச்சியின் முடிவில், தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொருட்கள், கிமு ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்தவை எனவும் கண்டுபிடித்துள்ளனர்.

இதனால், தமிழ் நாகரிகம் சிந்து சமவெளி நாகரீகத்தை விட பழமையானது என்ற உண்மை வெளிவந்துள்ளது. இங்கு கிடைக்கப்பட்டுள்ள பானைகளின் கழுத்துப் பகுதிகளில், எழுத்துக்கள் உள்ளன. அதனைப் பார்த்த ஆராய்ச்சியாளர்கள், கிமு ஆறாம் நூற்றாண்டிலேயே, தமிழர்கள் எழுத்து அறிவுடன் வாழ்ந்துள்ளனர்.

அதே சமயம், எழுத்துக்கள் ஒரே மாதிரி இல்லை. இதனால், இதனை வெவ்வேறு ஆட்கள் எழுதியிருக்கும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. மேலும், அங்கு பானைக் குவியல்கள் கிடைக்கின்றன. இதனை அடுத்து, அங்கு பானைகளை உருவாக்கும் பானைக் கூடம் இருந்திருக்க வாய்ப்பிருந்திருக்கலாம் எனவும் நம்புகின்றனர்.

பல மதிப்பு மிக்க கற்களால் ஆன, வளையல்கள் உட்பட பல ஆபரணங்கள் கிடைத்துள்ளன. கிமு இரண்டாம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட மண் அரிட்டைன் பானை கிடைத்துள்ளது. இதனை வைத்துப் பார்க்கும் பொழுது, நம் தமிழ் இனம், ரோம் நகருடன் வியாபாரம் செய்துள்ளது உறுதியாகின்றது. மேலும், பெண்கள் அதிக வேலைப்பாடுடன் கூடிய நகைகள், அணிகலன்களைப் பயன்படுத்தியிருந்திருக்கின்றனர். அவைகளும் கிடைத்திருக்கின்றன.

HOT NEWS