அறம்-2விற்கு தயாராகும் கீர்த்தி சுரேஷ்!

25 June 2020 சினிமா
keerthisuresh.jpg

நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கப்பட்ட திரைப்படம் அறம்.

2017ம் ஆண்டு வெளியான இந்தப் படம், ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தையைக் காப்பாற்றுவது குறித்து படமாக்கப்பட்டு இருந்தது. இதனை கோபி நைனார் இப்படத்தினை இயக்கி இருந்தார். இந்தப் படத்தின் அடுத்தப் பாகத்தினை இயக்க அவர் தயாராகி உள்ளார். அவர் இந்தப் படத்திலும், நடிகை நயன்தாராவினை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

இந்த சூழ்நிலையில், நயன்தாரா இதன் அடுத்தப் பாகத்தில் நடிக்க மறுத்து விட்டாராம். இந்நிலையில், அவரைத் தொடர்ந்து சமந்தாவிடம் பேச்சு வார்த்தை நடந்துள்ளது. அவரும் சம்மதிக்காத நிலையில், தற்பொழுது கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். தற்பொழுது கீர்த்தி சுரேஷ் நடித்து வெளியான பெண்குயின் திரைப்படத்தில், கீர்த்திக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது.

தொடர்ந்து ரஜினியின் அண்ணாத்த, மரைக்காயர், மிஸ் இந்தியா உள்ளிட்டப் பலப் படங்களில் நடித்து வருவதால், இவர் அறம்-2 படத்தில் நடிப்பாரா என்றக் கேள்வி எழுந்துள்ளது. அவர் ஒப்புக் கொள்ளும் பட்சத்தில், விரைவில் அறம்-2 படத்தின் சூட்டிங் ஆரம்பிக்கும் என, கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

HOT NEWS