பழைய கதை தான் ஆனால், அதனை எடுத்து இருக்கும் விதம் நன்றாக உள்ளது. எப்பொழுதும் கத்திப் பேசும் சசிகுமார், கையில் கத்தி, தாடி, மீசை இருப்பவரை, முற்றிலும் மாற்றி காட்டி இருக்கிறது இத்திரைப்படம்.
இந்தத் திரைப்படத்தின் இயக்குநர் சுசீந்திரன். தமிழ் சினிமாவின் நல்ல இயக்குநர் என்றப் பெயரைப் பெற்றவர். அவருடையப் படைப்புகள் பெரும்பாலும், குடும்பத்தினருடன் பார்த்து ரசிக்கும் வகையிலேயே இருக்கும். இப்படமும் அப்படித் தான். அனைவராலும் ரசிக்கும்படியே உருவாக்கி உள்ளார்.
வெண்ணிலா கபடிக் குழுவிற்கு சற்று மாற்று தான் இந்தக் கென்னடி கிளப். அதில் வீரர்கள், கென்னடிக் கிளப்பில் பெண் வீராங்கணைகள். முன்னாள் இராணுவ வீரரான பாரதிராஜா ஒரு கபடி கிளப்பினை நடத்தி வருகிறார். அதில் அப்பகுதியைச் சேர்ந்த கிராமப்புற பெண்கள் கலந்து கொண்டு கபடி விளையாடுகின்றனர். இவர்களுக்கு அப்பகுதியில் வசிக்கும் சசிகுமார் கபடி விளையாடும் பயிற்சி அளிக்கிறார்.
அவ்வாறு பயிற்சி பெரும் வீராங்கணை, இந்திய கபடி அணிக்குத் தேர்வாகிறார். அவரிடம் பணம் கேட்கிறார் அத்துறை அதிகாரி. இதனால், என்னென்னப் பிரச்சனைகள் வருகிறது? அந்த வீராங்கணைகள் என்ன ஆனார்கள்? அநியாயத்தைத் தட்டிக் கேட்டாரா ஹீரோ எனப் படம் செல்கிறது. அதே சலிப்படையும் கதை தான். ஆனால், சுவாரஸ்யமாக எடுத்துள்ளனர். என்பதால் திரையறங்கில் படம் ஓடும் பொழுது யாரும் எழுந்து செல்லவில்லை.
பாடல்கள் சுமாரிலும், சுமார் ரகம். ஒரு படம் கமர்ஷியலாக வெற்றிப் பெற வேண்டும் என்றால், குறைந்தது இரண்டு பாடல்கள், நல்ல கதை இவைகள் இருக்க வேண்டியது குறைந்தபட்ச உத்திரவாதத்தைத் தரும். இதில் அப்படி எதுவும் இல்லை.
பாராதிராஜா இந்த வயதிலும் நல்லத் துடிப்பாக இருக்கிறார். அவருக்கு நம்முடைய பாராட்டுக்கள். உண்மையான கபடி வீராங்கணைகள் இப்படத்தில் நடித்துள்ளனர். அவர்களுடைய வாழ்க்கை எவ்வளவு கடினமானது என்பதனை, இப்படத்தில் நாம் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.