சத்துணவு அல்ல! சத்தான உணவு! அசத்தும் கேரளா! குழந்தைகள் குதூகலம்!

06 March 2020 அரசியல்
keralalaunch.jpg

கேரளாவில் பல்வேறு சமூக மாற்றங்களை மட்டுமின்றி, பலவிதமான முற்போக்குத் திட்டங்களை உருவாக்கியும், அமல்படுத்தியும் வருகின்றது, பினராய் விஜயன் தலைமையிலான அரசு.

நாடு முழுவதும் சத்துணவு மற்றும் மதிய உணவுத் திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டு, அமலில் இருந்தாலும், தற்பொழுது அவைகளுக்கெல்லாம் முத்தாக இருப்பது கேரளா தான். ஆம், அங்கு தற்பொழுது, மதிய உணவாக பல்வேறு சத்தான உணவுகள் வழங்கப்படுகின்றன.

ஒரு நாள் தேங்காய் சாதம் என்றால், மற்றொரு நாள் நெய் சாதம் என கேரளாவின் அரசுப் பள்ளிகள் அசத்துகின்றன. மேலும், சிக்கன் பொறியல், சுவையான பழங்கள், முட்டை மற்றும் பால், பால்பாயாசம், க்ரீன் சாலட், பச்சைக் காய்கறிகள் போன்றவைகளும் வழங்கப்படுகின்றன.

இதனால் கடந்த 36 மாதங்களில், அங்குள்ள அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளவர்களின் எண்ணிக்கையானது, 4.77 லட்சமாக உயர்ந்துள்ளது என கூறப்படுகின்றது. ஹ்ம்ம்ம்! நம்ம தமிழ்நாட்டில் தான், உலகிலேயே முதன் முறையாக சத்துணவு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், தற்பொழுதுள்ள நிலை வேறு!

HOT NEWS