ஐஎஸ்எல் ஆரம்பமானது! கேரளா வெற்றி!

21 October 2019 விளையாட்டு
keralablasters.jpg

இந்தியன் சூப்பர் லீக் எனப்படும் கால்பந்து போட்டி நேற்று ஆரம்பமானது. 2019ம் ஆண்டுக்கானப் போட்டி, நேற்று கோலாகலமாக ஆரம்பித்தது.

ஆறாவது முறையாகத் தொடர்ந்து நடக்கும் இப்போட்டியில், பத்து அணிகள் விளையாட உள்ளன. இதன் முதல் போட்டி, நேற்று கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு, கேரளா பிளாஸ்டர்ஸ் அணியும், அட்லட்டிக்கோ டீஈ கொல்கத்தா அணியும் மோதின.

கேரள மாநிலம், கால்பந்து விளையாட்டிற்குப் புகழ் பெற்றது. அங்கு, கால்பந்து ரசிகர்களே அதிகம். அவர்கள் மண்ணில், கால்பந்து போட்டி நடந்தால் எப்படி இருக்கும் என யோசிக்கவே முடியாது. அந்த அளவிற்கு உற்சாகம், மகிழ்ச்சி மற்றும் ஆரவாரம் என மைதானவே கலக்கும். அப்படியொரு ரசிகர்கள் முன்னிலையில், இப்போட்டி நடைபெற்றது.

இதில், இந்திய வீரர்கள் பலரும் சிறப்பாக விளையாடினர். இந்த ஆண்டின் முதல் கோலினை கொல்கத்தாவின் ஹீயூக் அடித்து அசத்தினார். இதனால், கொல்கத்தா அணி முன்னிலைப் பெற்றது. இருப்பினும், கொல்கத்தாவின் சிறப்பான தடுப்பாட்டம் மற்றும் நூதன பாஸ் முறைகளால், கொல்கத்தாவினால் கேரள வீரர்களின் வியூகங்களைக் கணிக்க இயலவில்லை. ஆட்டத்தின் 30 நிமிடத்தில், கொல்கத்தா வீரர் செயத் தவறின் காரணமாக, கேரளா அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.

அதனை சிறப்பாக பயன்படுத்திய கேரளா அணியின் பார்த்திலோமோ ஆக்பெக்கே, கோல் அடித்து ஆட்டத்தின் போக்கினை மாற்றினார். அவர் அடித்தக் கோலின் காரணமாக, ஆட்டம் 1-1 என்ற கணக்கில் இருந்தது. மேலும், தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, சரியாக முதல் பாதியின் கடைசி நிமிடத்தில் அடுத்தக் கோலினை அடித்தது. அதனையும், பார்த்திலோமோ ஆக்பெக்கே அடித்து அசத்தினார். முதல் பாதி முடிவதற்குள்ளேயே வெற்றியினைத் தன் வசப்படுத்தியது கேரளா.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில், இரு அணிகளுமே கோல் அடிக்க முயற்சி செய்தும், சிறப்பானத் தடுப்பாட்டத்தின் காரணமாக கோல் அடிக்க முடியவில்லை. கடைசியில் 2-1 என்ற கோல் கணக்கில், கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, கொல்கத்தா அணியினை வீழ்த்தி ஐஎஸ்எல் 2019ம் ஆண்டின் முதல் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.

இன்று இரவு நடைபெறும் போட்டியில், இரவு 7.30 மணிக்கு ஜாம்ஷெட்பூர் அணியும், டெல்லி டைனமோஸ் அணியும் மோதுகின்றன.

HOT NEWS