ரயில்கள் இயக்கம்! சூப்பர்ஸ்ப்ரெட்டர் செயலாக மாறும்! கேரளா காட்டம்!

27 May 2020 அரசியல்
pinarayivijayan19.jpg

முன்னறிவிப்பில்லாத ரயில்களை இயக்குவதால், கொரோனா வைரஸானது அதிகமாகப் பரவும் என, கேரள மாநில நிதியமைச்சர் வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

தற்பொழுது புலம் பெயரும் தொழிலாளர்களுக்காக, மத்திய அரசு சிறப்பு ரயில்களை இயக்கி வருகின்றது. இதனால், தங்களுடைய சொந்த மாநிலங்களுக்கு புலம் பெயரும் தொழிலாளர்கள் சென்று கொண்டு இருகின்றனர். இது குறித்து, கேரள நிதியமைச்சர் ஐசக் தாமஸ், இந்திய ரயில்வேயினை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் பதிவிட்டுள்ள டிவீட்டில், ரயில்கள் அனைத்தும் சூப்பர்ஸ்ப்ரெட்டராக மாறி வருகின்றன. முன்னறிவிப்பில்லாமல், ரயில்கள் இயக்கப்படுவதை நிறுத்த வேண்டும். சரியாகப் பரிசோதனை செய்தே, ரயில்களை இயக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

கேரளாவில் தற்பொழுது கொரோனா வைரஸால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 963 ஆக உள்ளது. இதில், மகாராஷ்டிராவில் இருந்து வந்த 72 பேரும், தமிழ்நாட்டில் இருந்து வந்த 71 பேரும் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து திரும்பியவர்களாலும், இந்த எண்ணிகை அதிகரித்துள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில், சர்வதேசதப் பாராட்டினைப் பெற்ற கேரள அரசாங்கம், தற்பொழுது மீணும் இந்த வைரஸால் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளது.

HOT NEWS