கேரளாவில் நிலச்சரிவு! 80 பேர் மாயம்! முதல்வர் இறங்கல்!

08 August 2020 அரசியல்
kerala11.jpg

கேரளாவின் மூணாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, அங்கு பணியாற்றிய 80 பேர் மாயமாகி உள்ளனர்.

கேரளாவில் தற்பொழுது தீவிரமாக மழை பெய்து வருகின்றது. இதனால், அம்மாநிலத்தில் உள்ள அணைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றது. இந்நிலையில், கேரளாவின் மூணாறுப் பகுதியில் தோட்டத் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள், அங்குள்ள வீடுகளில் தங்கியிருந்தனர். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக அப்பகுதியில் தமிழக மக்கள் வசித்து வந்தனர்.

இந்நிலையில், திடீரென்று பெய்த கனமழையின் காரணமாக அந்த வீடுகள் அனைத்தும் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால், அந்த வீடுகளில் தங்கியிருந்த 80 பேரின் நிலை என்ன என்று அச்சம் எழுந்துள்ளது. இது குறித்து, கேரளத் தரப்பிடம் விசாரிக்கையில், 50 பேர் பலியாகி இருக்கலாம் என்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காணாமல் போனவர்களின் உடலினைத் தேடும் பணியினை, மீட்புத் துறையினர் செய்து வருகின்றனர்.

இந்த நிலச்சரிவில் சிக்கியவர்கள் அனைவரும், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியினைச் சேர்ந்தவர்கள் எனக் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அவர்களுடைய உடலினைக் கண்டுபிடிக்க, அப்பகுதியினைச் சேர்ந்த 10 பேர் தற்பொழுது கேரளாவிற்கு விரைந்துள்ளனர்.

HOT NEWS