கேரளாவில் சில மணி நேரத்திலேயே ஊரடங்கு தளர்வு வாபஸ்!

21 April 2020 அரசியல்
keralacm.jpg

கேரளாவில் மாநில அரசால் அனுமதிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வானது, சில மணி நேரங்களிலேயே வாபஸ் பெறப்பட்டது.

கேரளாவில், தற்பொழுது ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இந்தியாவில் முதன் முதலில், கேரளாவில் தான் கொரோனா வைரஸானது பரவியது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது இந்தியா முழுக்க இந்த வைரஸானது பரவி வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, மே-3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால், அனைத்து மாநிலங்களிலும் பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கேரளாவில் நேற்று மட்டும் ஆறு பேர் புதியதாக, நோய் தொற்று உள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டு உள்ளனர். 21 பேர் நோய் தொற்றில் இருந்து நேற்று, உடல்நலம் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதனிடையே நேற்று கேரளாவில் பல விஷயங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

சலூன் கடைகள், உணவகங்கள், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் எனப் பலவற்றிற்கும் அனுமதி வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து, மத்திய அரசு உடனடியாக கடிதம் ஒன்றினை அனுப்பியது. இவ்வாறு, ஊரடங்கு உத்தரவினைத் தளர்த்துவது, நோய் பரவுவதற்கு ஏதுவாக அமையும் என்றுக் கூறியிருந்தது. இதனைத் தொடர்ந்து, மீண்டும் ஊரடங்குத் தளர்வினைத் திரும்பப் பெறுவதாக கேரள மாநிலம் அறிவித்தது.

இது குறித்துப் பேசிய கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன், மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையில், எவ்வித மோதல் போக்கும் இல்லை எனவும், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தற்பொழுது ஊரடங்கு உத்தரவானது முழுமையாகக் கடைபிடிக்கப்படுகின்றது எனவும் கூறினார்.

HOT NEWS