இந்திய அளவில் பட்டையைக் கிளப்பியத் திரைப்படம் கேஜிஎப். கன்னடத் திரைப்படமான இது தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி எனப் பல மொழிகளிலும், இப்படம் வெளியாக பாக்ஸ் ஆபிசில் சக்கைப் போடு போட்டது.
இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்பொழுது உருவாகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் நடிக்கும் மற்றக் கதாப்பாத்தரங்களில் நடிக்கும் நடிகர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. இதில், ஆதிரா என்றப் பலம் வாய்ந்த கதாப்பாத்திரத்தில் நடிக்கும் நடிகரைத் தேர்ந்தெடுக்கும் பணியில், படக்குழு ஈடுபட்டு இருந்தது.
இந்நிலையில், இன்று ஆதிரா கதாப்பாத்திரத்தின் அறிவிப்பு வெளியானது. அதன்படி, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆதிரா கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பினை படக்குழு இன்று வெளியிட்டது.