கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் தேதியானது, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு தமிழ், கன்னடா, தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான திரைப்படம் கேஜிஎப். இந்தப் படத்தில் நடிகர் யாஷ் நடித்திருந்தார். முழுக்க முழுக்க டான் சம்பந்தப்பட்ட விஷயங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படமே இந்த கேஜிஎப்.
இந்த கேஜிஎப் படத்தில் கோலார் தங்க வயலில் அடிமைகளாக வேலை செய்தவர்கள் பற்றியும், அவர்களை எவ்வாறு கதாநாயகன் மீட்டான் என்பது பற்றியும் படமாக்க இருந்தனர். இந்தப் படம் பட்டித் தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. இந்நிலையில், இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எப்பொழுது வெளியாகும் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
தற்பொழுது அப்படத்தின் அதிகாரப்பூர்வத் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. வருகின்ற அக்டோபர் 23ம் தேதி 2020ம் ஆண்டு இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது என, படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனால், இப்படத்தின் ரசிகர்கள் மகிழ்ச்சியாக, சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.