கொரோனா பாதிப்பிலும் ஆன்லைன் க்ளாஸ்! ஆசிரியருக்கு குவியும் பாராட்டுக்கள்!

14 May 2020 அரசியல்
kifayathussain.jpg

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகின்ற சூழ்நிலையில், ஆசிரியர் கிஃபாயாத் ஹூசைன் இணையத்தில் வைரலாகி உள்ளார்.

லடாக் மாநிலம், லேக் மாவட்டத்தில் உள்ளது லாம்டன் மாடல் சீனியர் செகன்டரி பள்ளியில் பணியாற்றி வருகின்றார். கடந்த ஏப்ரல் 30ம் தேதி அன்று, இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அங்குள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும் கூட, ஆசிரியர் பணியின் மீதுள்ள தீரான காதலால், தற்பொழுது இணைய சேவையினைப் பயன்படுத்தி வகுப்பு எடுத்துக் கொண்டு இருக்கின்றார் ஹூசைன்.

ஜூம் மற்றும் யூடியூப்பினைப் பயன்படுத்தி, தன்னுடைய வகுப்பு மாணவர்களுக்குப் பாடங்களை எடுத்து வருகின்றார். இது குறித்து அவர் கூறுகையில், நான் ஆசிரியாக இருப்பது என்னுடைய வேலை மட்டும் அல்ல. அது என்னுடைய வாழ்நாள் விருப்பம். அதனால், அதனை முடிந்த வரை சிறப்பாக செய்யவே முயல்வேன். எனக்கு கொரோனா வைரஸ் இருப்பது குறித்து, என்னுடையத் தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தேன்.

அதற்கு அவர், முதலில் தனிமையினைக் கடுமையாகக் கடைபிடியுங்கள். உடல்நலம் சீரானதும், பின்னர் பாடம் எடுக்கலாம் என்றுக் கூறினார். இருப்பினும், மாணவர்களின் படிப்புப் பாதிக்கப்படும் என்பதால், நான் இணையத்தினைப் பயன்படுத்திக் கல்விக் கற்றுத் தருகின்றேன். இங்குள்ள மருத்துவமனையில் இணயைமானது, விட்டு வருகின்றது. மற்றபடி, என்னை மருத்துவர்களும், செவிலியர்களும் சிறப்பாக பார்த்துக் கொள்கின்றனர்.

எனக்கு என்னுடையப் பள்ளியின் சார்பில், டிஜிட்டல் போர்டுகளும், பேனாவும் வழங்கப்பட்டு உள்ளன. இதனைப் பயன்படுத்தி, தினமும் மதியம் இரண்டு மணி முதல் மூன்று மணி வரை ஜூம் ஆப்பினை பயன்படுத்தி வகுப்பு எடுக்கின்றேன். யூடியூப்பில் வீடியோக்களை பதிவு செய்து, அதனை என்னுடைய மாணவர்களுக்கு அனுப்பி வைக்கின்றேன் என்றுக் கூறியுள்ளார்.

HOT NEWS