அரையிறுத்திக்குத் தகுதி பெற்றார் கிட்டம்பி ஸ்ரீகாந்த்!

16 November 2019 விளையாட்டு
kidambi.jpg

ஹாங்காங்கில் நடைபெற்று வரும் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் கிட்டம்பி ஸ்ரீகாந்த் அரையிறுத்திக்குத் தகுதி பெற்றார்.

ஒலிம்பிக் சாம்பியனும், சீன வீரருமான சென் லாங்குடன் அவர் காலிறுதிதிப் போட்டியில் மோதினார் கிட்டம்பி. கிட்டம்பியை விட மிக வலிமையான வீரரே இந்த சென் லாங். அவருடன் கடுமையாகப் போராடிய கிட்டம்பி, தன்னுடைய முதல் சுற்றில் 21-13 என்ற கணக்கில் வென்றார்.

இதனிடையே, தன்னுடைய காலில் வலி ஏற்பட்டு உள்ளதால், என்னால் விளையாட முடியாது என சென் லாங் ஆட்டத்தில் இருந்து விலகினார். இதனால், கிட்டம்பி எவ்வித கஷ்டமுமின்றி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

தற்பொழுது அவர் அரையிறுதிப் போட்டியில், ஹாங்காங்கின் லீ ச்சீயூக் யூவினை எதிர்கொள்ள உள்ளார். இதே போல், இரண்டாவது சுற்றில் இந்திய வீராங்கணை பிவி சிந்து, தொடர்ந்து ஐந்தாவது முறையாக தோல்வி அடைந்து வெளியேறி அனைவருக்கும் ஏமாற்றம் அளித்தார். தற்பொழுது, இந்தியாவின் சார்பில், கிட்டம்பி ஸ்ரீகாந்த் மட்டுமே, ஹாங்காங் தொடரில் விளையாடி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS