உண்மையில் வந்தது கிம்மா அல்லது போலியா? நடப்பது என்ன?

08 May 2020 அரசியல்
kimjongunalive.jpg

வடகொரியா அதிபர் கிம் தன்னுடையப் போலியினை, நடமாட வைத்துள்ளார் என செய்தி ஊடகங்கள் கூறி வருகின்றன.

கடந்த ஏப்ரல் மாதம் 11ம் தேதி அன்று, வடகொரிய அதிபர் கிம்ஜோங் உன்னிற்கு இருதயத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. அன்று முதல், அவரை யாராலும் பார்க்க முடியவில்லை. செய்திகள், அந்நாட்டின் முக்கிய நிகழ்வுகள், நிகழ்ச்சிகள் என எதிலும் அவர் கலந்து கொள்ளவில்லை.

இந்த சூழ்நிலையில், அவர் கோமாவில் இருப்பதாகவும், அவர் இனி ஆட்சிக்கு வருவது கடினமான விஷயம் எனவும் பல செய்தி நிறுவனங்கள் கூறின. அவர் மரணம் அடைந்து விட்டதாகவும், அவரது மரணத்தினை கொரிய ஊடகங்கள் மறைக்கின்றன எனவும் செய்திகளை வெளியிட்டன. இவைகள் குறித்து எவ்வித பதிலையும், வடகொரியா கூறவில்லை.

கிம்மின் உடல்நலத்திற்காக, சீனாவிலிருந்து வடகொரியாவிற்கு மருத்துவர்கள் சென்றனர். கிம் ஜோங் உன் நன்றாக உள்ளார் எனவும், அவர் ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கின்றார் எனவும் தென் கொரியா கூறியது. இதனிடையே, அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கடந்த வாரம் நடைபெற்ற உரத் தொழிற்சாலைத் திறப்பு விழாவில், அதிபர் கிம் ஜோங் உன் தோன்றினார். அவர், அப்பொழுது ரிப்பன் வெட்டி அந்த தொழிற்சாலையினைத் திறந்து வைத்தார்.

தற்பொழுது அதிலும் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. அவர் உண்மையான கிம் இல்லை எனவும், அது கிம்மின் போலி எனவும் பலர் கூற ஆரம்பித்து உள்ளனர். அவருடைய பற்களை வைத்தும், கன்னம், நடையினை வைத்தும் அவர் போலி எனவும் கிம் இல்லை எனவும் பலர் கூறி வருகின்றனர்.

HOT NEWS