வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி! மீண்டும் பொது நிகழ்ச்சியில் கிம்!

27 August 2020 அரசியல்
kimjonguncomes.jpg

கிம் கோமாவில் உள்ளார் என்ற செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, வடகொரிய அதிபர் கிம்ஜோங் உன், புதிய கூட்டத்தில் தோன்றினார்.

கடந்த ஏப்ரல் மாதம், அவருக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதனால், அவருடைய உடல்நிலை மோசமானதாகவும், அதனைத் தொடர்ந்து அவர் கோமாவிற்கு சென்றதாகவும் கூறப்படுகின்றது. இதனிடையே, அவர் அந்நாட்டில் கட்டப்பட்டுள்ள புதிய உரத் தொழிற்சாலையினை திறந்து வைத்து, அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

ஆனால், அந்த நிகழ்ச்சியிலும் புதிய புரளி ஒன்று உருவானது. அந்த நிகழ்ச்சியில் கிம் கலந்து கொள்ளவில்லை எனவும், கிம்மின் போலியே அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் எனவும் கூற ஆரம்பித்தனர். திடீரென்று, தற்பொழுது கடந்த சில நாட்களாக கிம் ஜோங் உன் மரணமடைந்து விட்டார் என்றுக் கூறப்பட்டது. அதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது என்வென்றால், அவர் சகோதரி கிம் யோ ஜோங் தான்.

கிம் ஜோங் உன்னின் சகோதரியான கிம் யோ ஜோங்கிற்கு, புதிய பொறுப்புகள் கூடுதலாக வழங்கப்பட்டன. இதனால், அமெரிக்க செய்தி ஊடகங்கள் மீண்டும் புதிய செய்தியினை வெளியிட ஆரம்பித்தன. கிம் இறந்து விட்டதாகவும், அதனால் அவருடைய சகோதரிக்கு புதிய வாய்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டு வந்தன. இந்நிலையில், தற்பொழுது அதற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அதிபர் கிம்.

வடகொரியாவில் நடைபெற்ற முக்கிய அதிகாரிகள் கூட்டத்தில், அதிபர் கிம் கலந்து கொண்டார். கொரோனா வைரஸ் பரவுதல் குறித்தும், இந்த வார இறுதியில் வடகொரியாவினைத் தாக்க உள்ள புயல் குறித்தும் இந்தக் கூட்டத்தில் அவர் விவாதித்தார் எனவும் கூறப்படுகின்றது. இது குறித்த வீடியோவும் தற்பொழுது வெளியாகி உள்ளது.

HOT NEWS