எங்கள் நாட்டில் கொரோனா இல்லை! கிம் பெருமிதம்!

04 July 2020 அரசியல்
kimjongunhorse.jpg

எங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் இல்லை என, வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்து உள்ளார்.

உலகம் முழுக்க கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதில், வடகொரியாவில் இந்த வைரஸ் தொற்று இல்லை என அந்நாட்டு அரசு தொடர்ந்து தெரிவித்து வருகின்றது. இது குறித்து, செய்தியாளர்களுக்கு புதிய அறிக்கை ஒன்றினை வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் வழங்கி உள்ளார். அவர் அறிக்கையில், வடகொரியாவின் உழைப்பாளிகள் கட்சியின் ஊழியர்களின் தீவிர முயற்சியின் காரணமாக, கொரோனா வைரஸானது இங்கு பரவாமல் தடுக்கப்பட்டு உள்ளது.

நாம் வெற்றிகரமாக, இந்த வைரஸினை நம் நாட்டிற்குள் பரவவிடாமல் தடுத்துள்ளோம். இது மாபெரும் வெற்றியாகும் என்று அதிபர் கிம் கேசிஎன்ஏ செய்தி நிறுவனத்திற்குப் பேட்டி அளித்துள்ளார். மேலும், தொடர்ந்து உஷாராக இருக்க வேண்டும் எனவும், வைரஸ் தொற்று இனி மேலும் ஏற்பட்டு விடாமல் தடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

வடகொரியாவில் தற்பொழுது பள்ளிகள் திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளன. இருப்பினும், அங்கு பொதுமக்கள் கூடும் இடங்களில் தொடர்ந்து, தடை நீட்டிக்கப்பட்டு வருகின்றது. அனைத்து மக்களும் கண்டிப்பாக, முகக் கவசங்களை அணிய வேண்டும் எனவும், தனிமனித இடைவெளியினைப் பின்பற்ற வேண்டும் எனவும் கூறப்பட்டு உள்ளது.

HOT NEWS