எங்கள் நாட்டின் மிகப் பெரிய எதிரி அமெரிக்கா தான் என, அந்நாட்டின் அதிபரும் தொழிலாளர் கட்சியின் தலைவருமான கிம் ஜோங் உன் தெரிவித்து உள்ளார்.
அமெரிக்காவும் வட கொரியாவும் ஜென்ம எதிரிகளாக இருக்கின்றனர். இவர்களுக்குள் போர் மூளும் அபாயம் இருந்து வந்தது. இந்த சூழலில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், அமெரிக்க அதிபர் ட்ரம்பும், வடகொரிய அதிபர் கிம்மும் சந்தித்து பேசியதால், பிரச்சனையானது முடிவிற்கு வந்தது. இருப்பினும், கடந்த ஆண்டு மீண்டும், அமெரிக்காவின் எச்சரிக்கையினை மீறி, வடகொரியாவானது அணு ஆயுத சோதனையினை நடத்தியது.
இதனால், இரண்டு நாடுகளுக்கு இடையிலும் தொடர்ந்து பதற்றம் ஏற்பட ஆரம்பித்தது. வடகொரியா மீதான பொருளாதாரத் தடையானது தொடரும் எனவும், அமெரிக்கா எச்சரிக்கைகளை தெரிவித்து வந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டின் இறுதியில் அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், அதிபர் ட்ரம்ப் தோல்வியடைந்தார். புதிய அதிபராக, ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார்.
இதனால், தற்பொழுது வடகொரியாவின் கோபமானது வெளிப்பட ஆரம்பித்து உள்ளது. அந்நாட்டின் அதிபரும், தொழிலாளர் கட்சியின் தலைவருமான கிம் ஜோங் உன், புதியதாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளார். அவர் கூறுகையில், அமெரிக்கா தான் நம்முடைய வளர்ச்சிக்கு எதிரி எனவும், அவர்கள் தான் நம்முடைய முக்கியமான எதிரி எனவும், அவர்களை வீழ்த்தும் வகையில், நாம் வளர வேண்டும் எனவும் அவர் பேசியுள்ளார். இது தற்பொழுது உலகவளில் பேசு பொருளாக மாறியுள்ளது.