கொரோனாவில் இருந்து மீண்டு வாருங்கள்! ட்ரம்பிற்கு கிம் வாழ்த்து!

03 October 2020 அரசியல்
trump-kim.jpg

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், விரைவில் கொரோனாவில் இருந்து மீண்டு வருவார் என, வட கொரிய அதிபர் கிம் வாழ்த்துக்களைத் தெரிவித்து உள்ளார்.

நேற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிற்கும், மெலானியா ட்ரம்பிற்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார். அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என, இந்தியப் பிரதமர் மோடி உட்பட உலகின் பல முன்னணித் தலைவர்களும், வாழ்த்துக்களையும் வேண்டுதலையும் முன் வைத்து உள்ளனர்.

இந்த சூழ்நிலையில், வட கொரிய அதிபரும் தன்னுடைய வாழ்த்தினைக் கூறியுள்ளார். இது குறித்து வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் அந்நாட்டு செய்தி நிறுவனம் வாயிலாக செய்தி வெளியிட்டு உள்ளார். அதில், அமெரிக்க அதிபர் விரைவில் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்து வருவார் என, தாம் நம்புவதாகவும், அது அவரால் முடியும் எனவும் கூறியுள்ளார்.

HOT NEWS