கிம்மிற்கு பதிலாக வேகமாகப் பணியாற்றும் கிம்மின் தங்கை கிம் யோ ஜோங்!

24 April 2020 அரசியல்
kimyojong.jpg

தற்பொழுது வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், என்ன செய்கின்றார் என யாருக்கும் தெரியவில்லை. ஏன், உலக வல்லரசான அமெரிக்காவிற்கும் கிம் என்ன செய்கின்றார், அவருக்கு என்ன ஆனது எனத் தெரியவில்லை.

இந்நிலையில், அவருக்குப் பதிலாக அவருடைய சகோதரி கிம் யோ ஜோங் பணியாற்றுவார் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்காவின் கண்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நாடு வடகொரியா. அந்நாட்டின் அதிபரான கிம் ஜோங் உன்னை, மிசைல் மேன்(ஏவுகணை மனிதன்) என்று கூறினார். அந்த அளவிற்கு, தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை, வட கொரியா செய்து கொண்டே இருந்தது.

இருப்பினும், அடுத்தடுத்த நடந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கிம் இடையிலான சந்திப்புகள் போர் பதற்றத்தினை சந்தித்தன. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்த சூழ்நிலையிலும் கூட, வட கொரியா தன்னுடைய ஏவுகணை சோதனைகளைச் செய்து வருகின்றது. அந்நாட்டு அதிபர், கிம் ஜோங் உன்னிற்கு, அதிகளவில் புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. அதிகப்படியான உடல்எடை, அளவிற்கு மிஞ்சிய வேலைப்பளு காரணமாக, இதயம் பலகீனமானது.

இதனைத் தொடர்ந்து, அவருக்கு கடந்த ஏப்ரல் 12ம் தேதி அன்று, இருதயத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்றது. அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 15ம் தேதி நடைபெற்ற முக்கியக் கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. ஏப்ரல் 15ம் தேதி அன்று, வடகொரியாவினை உருவாக்கிய கிம்மின் தாத்தா கிம் 2 சுங் அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் கூட்டத்தில், அதிபர் கிம் ஜோங் கலந்து கொள்ளவில்லை.

இதனால், பொதுமக்கள் மட்டுமின்றி, மீடியாத்துறையினரும் சந்தேகம் கிளப்பினர். அதன்படி, அமெரிக்க புலனாய்வு அமைப்பும் அறிக்கை ஒன்றினை வெளியிட்டது. அதில், அதிபர் கிம் ஜோங் உன் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து, வடகொரியாவினை யார் வழிநடத்துவார்கள் என தீவிரமாகப் பேசப்பட்டு வருகின்றது. கிம் ஜோங் உன்னின் சகோதரியான கிம் யோ ஜோங், பதவிக்கு வருவதற்கு 90% வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகின்றது.

கிம் ஜோங் உன்னின் மாமா தற்பொழுது, வடகொரியா வந்துள்ள போதிலும், கிம் யோ ஜோங்கிற்கு உள்ள செல்வாக்கு மிகவும் அதிகமாகும். கிம் ஜோங்கின் குழந்தைகள் இன்னும் நாட்டினை நிர்வகிக்கும் அளவிற்கு வளரவில்லை என்பதால், தற்பொழுது நிலவுகின்ற சூழ்நிலையினை வைத்துப் பார்க்கும் பொழுது, கிம் யோ ஜோங் தான் வடகொரியாவினை வழிநடத்துவார் எனத் தெரிகின்றது.

அவர், தற்பொழுது வடகொரியாவின் இரண்டாவது பெரியத் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS