கொரிய தீபகற்பத்தில் பதற்றம்! தென் கொரியாவினை எச்சரித்த கிம்மின் சகோதரி!

16 June 2020 அரசியல்
kimyojong.jpg

கொரிய தீபகற்பத்தில் தற்பொழுது மீண்டும் பதற்றம் உண்டாகி உள்ளது.

தென் கொரியாவிற்கும், வடகொரியாவிற்கும் தொடர்ந்து பல ஆண்டுகளாக பிரச்சனைகள் நீடித்து வருகின்றன. இரண்டும் ஒரே தீபகற்பத்தினைச் சேர்ந்தவைகளாக இருந்தாலும், இரண்டும் வெவ்வேறு சித்தாந்தங்களைக் கொண்டுள்ளன. வடகொரியாவிற்கு கிம் ஜோங் உன் அதிபராகப் பதவியேற்ற பொழுது முதல் தற்பொழுது வரை, அவர் தென் கொரியாவிற்கு சிம்ம சொப்பணமாகவே இருந்து வருகின்றார். அவர் தொடர்ந்து, அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனை உள்ளிட்டவைகளைச் செய்து வருவதால், அந்நாட்டின் மீது, அமெரிக்கா பொருளாதாரத் தடையினை விதித்து உள்ளது.

இந்த சூழ்நிலையில், அவர் இறந்து விட்டதாகவும், அவருக்கு இருதயத்தில் நடைபெற்ற அறுவை சிகிச்சைக்குப் பின், கோமாவிற்குச் சென்று விட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், அந்நாட்டில் உருவாக்கப்பட்டு உள்ள புதிய உரத் தொழிற்சாலையின் திறப்பு விழாவிற்கு வருகை தந்திருந்த கிம், அந்த உரத் தொழிற்சாலையினைத் திறந்து வைத்தார்.

இருப்பினும், அவர் மீது தொடர்ந்து சர்ச்சைக் கேள்விகள் முன் வைக்கப்பட்டன. அதைப் பற்ற எல்லாம் வடகொரியா கண்டு கொள்ளவே இல்லை. தொடர்ந்து ஏவுகணை சோதனையில் அந்த நாட்டு இராணுவம், கிம் பார்வையில் நடத்தி வந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், கிம்மின் தங்கையான கிம் யோ ஜோங் தற்பொழுது அதிரடியாக எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.

வடகொரியாவின் இரண்டு மிகப் பெரிய தலைவராக இருப்பவர் கிம் யோ ஜோங். இவர் தற்பொழுது தென் கொரியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தேவையற்றவைகளை நாம் குப்பைத் தொட்டியில் போட வேண்டிய தருணம் இது. என்னுடைய அதிகாரத்தின்படியும், கட்சியின் அனுமதியின்படியும், அதிபரின் ஆணைப்படியும் நம்முடைய இராணுவம் தயாராக வேண்டும் என்றுக் கூறியுள்ளார்.

இது இரண்டு நாடுகளுக்கு இடையிலும் பதற்றத்தினை உருவாக்கி உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, இரண்டு நாடுகளும் மிக அமைதியாக இருந்து வருகின்றன. இந்த சூழ்நிலையில், இவ்வாறு வடகொரியா அறிவித்து இருப்பது பதற்றத்தினை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS