ஜியோவில் 11,367 கோடி முதலீடு செய்த பிரபல நிறுவனம்! அம்பானி ஹாப்பி!

23 May 2020 அரசியல்
mukeshambani1121.jpg

முகேஷ் அம்பானி ஆரம்பித்து, வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்ற ஜியோ நிறுவனத்தில் தற்பொழுது கேகேஆர் நிறுவனம் 11,367 கோடியினை முதலீடு செய்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னால், இந்தியாவில் மிகப் பெரிய அளவில் உருவாக்கப்பட்ட நிறுவனம் ரிலையோன்ஸ் ஜியோ. இதனை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் உருவாக்கியது.

இதன் மூலம், இலவச இணைய சேவையில் ஆரம்பித்து, பின்னர் இலவச தொலைத்தொடர்பு மற்றும் கட்டண இணைய சேவையை வழங்கி வருகின்றது.

ஆரம்பித்து குறுகியக் காலத்தில், அதிவிரைவாக இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாக மாறியது. ஐடியா உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களையும் எளிதாக வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்திய பொதுமக்களின் நம்பிக்கையினைப் பெற்ற இந்த நிறுவனம், அடுத்ததாக பல திட்டங்களை அறிவித்தது.

தற்பொழுது ஜியோ மார்ட் என்ற புதிய சேவையினை உருவாக்கி வருகின்றது. இந்த சூழ்நிலையில், ரிலையன்ஸ் ஜியோவில் தன்னுடைய முதலீட்டினை பேஸ்புக் நிறுவனம் செய்தது. சுமார் 5.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஜியோவில் முதலீடு செய்தது. அதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் சில்வர் லேக் நிறுவனம் 5,655.75 கோடி ரூபாயினை முதலீடு செய்தது.

பின்னர், விஸ்டா ஈக்குயூட்டி பார்ட்னர்ஸ் 11,367 கோடி ரூபாய் மதிப்பில் 2.32 சதவிகித ஈக்குயூட்டி பங்கினை வாங்கியது. ஜெனரல் அட்லான்டிக் நிறுவனம் 6598.38 கோடி ரூபாய் மதிப்பில் ஜியோ நிறுவனத்தின் 1.34 சதவிகித பங்கினை வாங்கியது. இந்த சூழ்நிலையில், 11,367 கோடி ரூபாயில் 2.32 சதவிகித பங்கினை கேகேஆர் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

ஒரே மாதத்தில் ஐந்து பெரும் நிறுவனங்களின் முதலீட்டினை, இந்த ஜியோ பெற்றுள்ளதால் 4.91 லட்சம் கோடி மதிப்பானது, 5.16 லட்சம் கோடி ரூபாயாக மதிப்பு கூடியுள்ளது.

HOT NEWS