கொளஞ்சி திரைவிமர்சனம்! படம் எப்படி இருக்கு?

27 July 2019 சினிமா
kolanjireview.jpg

சும்மா சொல்லக்கூடாது, நம்ம சமுத்திரக்கனிக்கு இந்தக் கதாப்பாத்திரமும் நல்லா பொருந்தியிருக்கு. பெரியார் கொள்கைகளைப் பற்றிப் பேசும் மனிதர். இருக்கமான முகம். மனைவியிடம் சிரித்துப் பேசும் போதும் சரி, எரிந்து விழும் போதும் சரி, கச்சிதமான, மிக எதர்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

படத்தில் பாடல்கள் ஹிட் ஆகியிருந்தால், படமும் பேசப்படும் வகையிலேயே இருக்கும். ஒளிப்பதிவு படத்திற்கு என்ன தேவையோ, அதை மிகையாகவும் இல்லாமல், குறையாகவும் இல்லாமல், கனக் கச்சிதமாக கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு ஒளிப்பதிவாளர் விஜயன் முனுசாமிக்கு வாழ்த்துக்கள்.

சரியான நடிகர், நடிகையர் தேர்வால் இப்படம் தப்பித்தது என்றுக் கூறலாம். இருப்பினும், ஒரு சிறு லாஜிக் ஓட்டைகளும் படத்தில் இருக்கத்தான் செய்கின்றன.

ரேட்டிங் 2.8/5

HOT NEWS