கடலைமிட்டாய் புவிசார் குறியீடு! கோவில்பட்டி குதூகலம்!

01 May 2020 அரசியல்
kadalaimittai.jpg

தமிழ்நாட்டின் கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு என, தனி மரியாதை உண்டு. அவ்வளவு புகழ் பெற்றது இந்தக் கடலைமிட்டாய்.

இதனை உலகின் பல நாடுகளுக்கும், கோவில்பட்டியினைச் சேர்ந்த நிறுவனங்கள் ஏற்றுமதி செய்து வருகின்றன. இதன் சுவை மற்றும் தரத்தின் காரணமாக, இந்த கடலை மிட்டாயானது அதிகளவில் புகழ் பெற்றது. இந்நிலையில், இந்தக் கடலைமிட்டாயும் புவிசார் குறியீட்டினை பெற்றுள்ளது.

கரிசல் மண்ணில் விளையும் நிலக்கடலையைப் பயன்படுத்தி, அந்தக் கடலையின் மூலம், கடலைமிட்டாய் உருவாக்கப்படுகின்றது. தற்சமயம், இந்தக் கோவில்பட்டி கடலைமிட்டாய் என்றப் பெயரில், போலி மிட்டாய்களும் வலம் வருகின்றன. இதனைக் குறைக்கும் விதத்திலும், கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு மதிப்பளிக்கும் விதத்திலும் தற்பொழுது கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு உள்ளது.

பழநி பஞ்சாமிர்தம், மதுரை மல்லிகைப்பூ, திருநெல்வேலி அல்வா வரிசையில், தற்பொழுது 34வது பொருளாக கோவில்பட்டி கடலை மிட்டாய்யும் சேர்ந்துள்ளது. இதற்கு, மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

HOT NEWS