விமான விபத்து! சாதூர்யமாக செயல்பட்ட விமானி! தப்பித்த உயிர்கள்!

08 August 2020 அரசியல்
kozhikodeplancrash.jpg

தற்பொழுது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி இருப்பதன் காரணமாக, உலகின் பல நாடுகளில் வசித்து வருகின்ற இந்தியர்களை வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வரும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அதனடிப்படையில், நேற்று 10 குழந்தைகள் உட்பட மொத்தம் 185 பேர் என, 190 பேர் (விமான ஊழியர்களையும் சேர்த்து) ஏர் இந்தியா விமானத்தின் மூலம், துபாயில் இருந்து இந்தியா வந்தனர்.

அவர்கள் நேற்று கேரளாவின் கோழிக்கோடு பகுதிக்கு விமானத்தில் வந்தனர். அங்கு கடும் மழைப் பெய்ததால், விமானம் தரையிறங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து விமானமும் வேறு வழியில்லாமல் தரையிறக்கப்பட்டது. அப்பொழுது, எதிர்பாராத விதமாக சாலையில் வலுக்கியபடியே விமானம் தரையிறங்கியது.

விமானம் கட்டுப்பாட்டில் இல்லாததை உணர்ந்த விமானி, விமானம் விபத்துக்குள்ளாக இருப்பதை, முன் கூட்டியே கணித்துவிட்டார். இதனைத் தொடர்ந்து, விமானத்தின் என்ஜின்களை ஆப் செய்துவிட்டார். இதனால், அந்த விமானம் வலுக்கிய படியே சென்று ஓடுதளத்திற்கு அப்பால் உள்ள பெரிய பள்ளத்தில் கவிழ்ந்தது. அதில், அந்த விமானம் இரண்டாக உடைந்துவிட்டது.

இந்த சம்பத்தில் சிக்கிய விமானப் பயணிகள் பயங்கரமாக அலறியுள்ளனர். இந்த விமான விபத்தில் தற்பொழுது வரை 19 பேர் பலியாகி உள்ளனர். விமானத்தின் மீட்புப் பணிகள் தற்பொழுது முடிந்து விட்டன. விமானி மட்டும் ஒருவேளை என்ஜினை ஆஃப் செய்யாவிட்டால், கண்டிப்பாக விமானம் தீப்பிடித்து எரிந்து இருக்கும் என பலரும் கூறுகின்றனர். அந்த விமானி தன்னுடைய உயிரினை தந்தை பயணிகளின் உயிரினைக் காப்பாற்றி உள்ளார்.

இந்த விமான நிலையம் குறித்து ஏற்கனவே பலமுறை எச்சரிக்கப்பட்டு இருந்தது. கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த விமானத்தின் ஓடுதளப் பகுதிக்கு அருகில் இடைவெளி விட வேண்டும் என்றுக் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. ஆனால், யாரும் கண்டு கொள்ளவே இல்லை. இந்த விமானத்தினை இயக்கிய விமானி சதே, ஏற்கனவே இந்திய விமானப்படையில் பணியாற்றியவர் ஆவார். அவருடைய தாத்தா, தந்தை மற்றும் இவர் என மூன்று தலைமுறையினரும், நாட்டுக்காகத் தங்கள் உயிரை தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS