பிகில் பட கதை விவகாரம்! கேபி செல்வா பேஸ்புக்கில் பதிவு!

18 October 2019 சினிமா
bigilaudiolaunch.jpg

பிகில் படத்தின் கதை என்னுடையது என, உதவி இயக்குநர் கேபி செல்வா தற்பொழுது, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்நிலையில், அவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், இது குறித்தப் பதிவு ஒன்றினையும் பதிவு செய்துள்ளார்.

ஒரு தயாரிப்பாளர் கிட்ட கதையை கொடுத்துட்டு வந்ததுக்கப்பறம், அவங்க கிட்ட இருந்து ஒரு கால் வராதா, நம்ம வாழ்க்க மாறாதான்னு யோசிக்கிற நிறைய உதவி இயக்குனர்கள்ல, நானும் ஒருத்தன். போன தீபாவளிக்கு இந்த நேரம், எங்களுக்குள்ள இந்த கதை பிரச்னை தொடங்குச்சு! உங்க கிட்ட நான் காசு கேட்டு வந்தனா, இல்ல எதுக்கு வந்தேன்னு உங்களுக்கு நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல. ஏன்னா, நானும் உங்க ஆட்களும் பேசின conversation வாய்ஸ் ரெகார்ட், உங்க கிட்ட இருக்கு.

ஒரு வேல மறந்து இருந்தா, அத கேளுங்க! அண்ட் இது விஷயமா, ஜனவரி 2019 எழுத்தாளர் சங்கத்துல நான் புகார் கொடுத்த! அப்ப, அவங்க ஷூட்டிங் கூட ஆரம்பிக்கல, அப்புறம் உண்மையாவே அந்த இயக்குனர் ஜூலை 2018 கதை பதிவு பண்ணி இருந்தா, ஏன் என்கிட்ட அத பத்தி எழுத்தாளர் சங்கம், என்னோட புகாரை விசாரிக்கும் போதே இத சொல்லல! எதுக்கு என்ன நீதிமன்றத்துக்கு போங்கன்னு எழுத்தாளர் சங்கம் சொல்லணும்!

இப்ப வர, அவங்க கிட்ட இருந்து எந்த பதிலும் வரல! நாங்க படத்தை, தடை செய்யணும்ன்னு ஒரு விதத்துலையும் நினைக்கல! எங்க நோக்கமும், அது இல்ல! காசுக்காக விளம்பரத்துக்காக வர்றான், இவனுக்கெல்லாம் என்ன தகுதி இருக்கு இவ்ளோ பெரிய இயக்குனர பத்தி பேசன்னு, நிறைய பேர் சொல்றீங்க. என் உரிமையை, எனக்கான அங்கீகாரத்தை, கேக்கணும்ன்னு நெனச்ச கேட்ட அவ்ளோதான்.

இதுக்காக, ஒவ்வொரு நாளும் அந்த இயக்குனர் ஆபீஸ் வாசல்ல நிக்கும் போது, அவரோட ஆட்கள், செக்யூரிட்டி என்ன பாக்குற விதம் இருக்கே, அந்த வலி யாருக்கும் புரியாது. எங்க நோக்கம், இவ்ளோ கோடி இன்வெஸ்ட்மென்ட் பண்ண படத்தை, தடை செய்றது இல்ல. அந்த மாதிரி, ஒரு கேவலமான எண்ணம் உள்ள ஆட்களும் நாங்க இல்ல, எனக்கு கடவுள் தொணைக்கு இருக்காரு.

நீங்க என்ன பத்தி பொய்யா பேசி, உங்க தரத்தை நீங்களே கொறச்சிக்காதிங்க! Respect your enemy!! அதனால, உண்மையா நேர்மையா பேசுங்க!! அதவிட்டுட்டு, பணம் கேட்டான் அத கேட்டான்னு சில்ற மாதிரி பேசாதீங்க!!

Ignore negativity!! படத்துல கூட negative கேரக்டர் இல்லனா, positive character ஹீரோவுக்கு வேலையும் இல்ல valueவும் இல்ல! So im happy that im in negative shade in your point of view! End of the day, நான் உங்கள ஜெயிக்கல, ஆனா உங்களுக்கு நிகரா சண்ட செஞ்ச! அது போதும். நெறைய கத்துக்கிட்டு, எக்கச்சக்க அனுபவம் இந்த ஒரு வருஷத்துல. இது நீங்க சொல்ற காச விட பெருசு, so எல்லாத்துக்கும் நன்றி! Kp.Selvah என பதிவிட்டுள்ளார்.

HOT NEWS