கூடங்குளம் கணினியில் வைரஸ்! ஹேக் செய்யப்படவில்லை எனத் தகவல்!

31 October 2019 அரசியல்
kudankulam.jpg

கூடங்குளம் அணு உலையில் உள்ள கணினியில், வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த வைரஸால் அணு உலைக்கும், உள்ளே உள்ள இணைப்புகளுக்கும் எவ்வித்தப் பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, நேற்று கூடங்குளம் அணு உலையின் இயக்குநர் ஏகே நீமா வெளியிட்டுள்ள அறிக்கையில், வட கொரியாவினைச் சேர்ந்த வைரஸ் ஒன்று, கூடங்குளம் அணு உலைக்குச் சொந்தமான கணினியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸை, கடந்த செப்டம்பர் 4ம் தேதி கண்டுபிடித்தனர் எனவும், இது குறித்து கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீமிற்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த வைரஸானது, உள்ளே வேலை செய்யும் ஒருவர், அலுவல் வேலைக்காக தன்னுடைய கம்ப்யூட்டரை இணைக்கும் பொழுது, அதில் இருந்து இந்த வைரஸ் கூடங்குளம் கம்ப்யூட்டரில் பரவி இருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த பிரச்சனையின் காரணமாக, தொடர்ந்து கூடங்குளம் கணினிகளும் மற்றும் அதன் இணைப்புகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடங்குளத்தைப் பொறுத்த வரையில், அது பொதுமக்கள் பயன்படுத்தும் இணையத்தைப் பயன்படுத்துவதில்லை. அது தனிப்பட்ட இணைப்பு மற்றும் தனிப்பட்ட தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி வருகின்றது. இந்த அணு உலையானது டிபார்ட்மென்ட் ஆஃப் அடாமிக் எனர்ஜி என்ற குழுவினால் தொடர்ந்து நிர்வகிக்கப்பட்டும், கண்காணிக்கப்பட்டும் வருகின்றது.

HOT NEWS