கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்ட காரணத்தால், குக செல்வம் திமுகவின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.
கடந்த வாரம், பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவினை சந்தித்துப் பேசினார் திமுகவின் எம்எல்ஏ குகசெல்வம். அவர் அவ்வாறு செய்ததற்கு, பலரும் தங்களுடையக் கண்டனத்தினைப் பதிவு செய்தனர். இது குறித்துக் கருத்துத் தெரிவித்த குக செல்வம், மறைந்த ஜே அன்பழகனின் பதவியினைத் தான் கேட்டதாகவும், அதற்கு திமுக தலைமை மறுப்புத் தெரிவித்ததாகவும் கூறினார். திமுக கட்சி என்பது, தற்பொழுது முழுவதும் குடும்பக் கட்சியாக மாறியுள்ளது என்றுக் கூறினார்.
இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து, அவரை சஸ்பெண்ட் செய்து திமுக தலைவர் உத்தரவிட்டார். இந்நிலையில், தற்பொழுது அதிரடியாக முக ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு உள்ளார். அதில், திமுக தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்ட கு.க செல்வம், கழகக் கட்டுப்பாட்டினை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அவரிடம் கேட்கப்பட்ட விளக்கத்திற்கு அளித்துள்ள பதில், ஏற்கும்படியாக இல்லாத காரணத்தால், அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகின்றார் என அறிக்கை வெளியாகி உள்ளது.