திமுகவில் கு.க.செல்வம் தற்காலிக நீக்கம்!

05 August 2020 அரசியல்
kukaselvambjp.jpg

திமுக கட்சியின் உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினருமான கு.க.செல்வம் தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.

நேற்று திமுக கட்சியின் உறுப்பினரான செல்வம், டெல்லியில் உள்ள பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவினை சந்தித்தார். அங்கு அவர் சந்திக்கும் பொழுது, தமிழக பாஜக மாநிலத் தலைவர் முருகன் உடனிருந்தார். இது, தமிழக அரசியலில் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

இதனால், செல்வம் பாஜகவில் இணைந்துவிட்டார் என தகவல்கள் பரவின. இந்த சூழ்நிலையில், அவர் பாஜகவில் இணையவில்லை எனவும், மரியாதை நிமித்தமாகவே சந்தித்ததாகவும் அவர் தெரிவித்தார். இது குறித்து இன்றுப் பேசிய செல்வம், மறைந்த ஜெ. அன்பழகனின் பதவியினை தாம் கேட்டதாகவும், ஆனால் திமுக தலைமை எனக்கு வழங்கவில்லை எனவும் கூறினார். மேலும், திமுக வாரிசு அரசியலில் இருந்து குடும்ப அரசியலுக்குச் சென்றுவிட்டது எனவும் குற்றம் சாட்டினார்.

இது பற்றிப் பேசிய பாஜக மாநிலத் தலைவர் முருகன், திமுகவில் இருந்து பிரிய நினைப்பவர்கள் யாராக இருந்தாலும், பாஜகவில் இணையலாம் என்றுக் கூறினார். இந்நிலையில், திமுக தலைமையானது தற்பொழுது அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது. அதில், திமுகவின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும், கு.க. செல்வத்தினைத் தற்காலிகமாக நீக்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

HOT NEWS