கட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் 50 ஆண்டுகளுக்கு எதிர்கட்சி தான்! காங்கிரஸில் தள்ளுமுள்ளு!

29 August 2020 அரசியல்
CongressManifesto.jpg

காங்கிரஸ் கட்சியில் நாளுக்கு நாள், உள்கட்சிப் பிரச்சனை அதிகரித்த வண்ணம் உள்ளது.

அந்தக் கட்சி சார்பில் நடைபெற்ற கடைசி காரியக் கமிட்டிக் கூட்டத்தில், பெரிய அளவில் பிரச்சனை ஏற்பட்டது. அதற்கு முக்கியக் காரணமாக இருந்தது கட்சியின் தலைமை பதவியும், ராகுல் காந்தியும் தான். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும், பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுகின்றனர் என்றுப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். இதற்குப் பலரும் தங்களுடைய எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

கபில் சிபில், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ராகுலின் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைக் கருத்தில் கொண்டு, தற்பொழுது குலாம் நபி ஆசாத் புதிய கருத்தினை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், காங்கிரஸ் கட்சியில் கடந்த 10 முதல் 15 ஆண்டுகளாக, உள்கட்சித் தேர்தலானது நடைபெறாமலேயே உள்ளது.

உள்கட்சித் தேர்தலை நாம் தற்பொழுது நடத்தியே ஆக வேண்டும். நாம் தற்பொழுது, ஒவ்வொரு தேர்தலாகத் தோல்வியடைந்து கொண்டே இருக்கின்றோம். நாம் மீண்டும் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றால், நாம் கட்சியினை வலிமைப்படுத்த வேண்டும். நம்முடைய கட்சியானது எதிர்கட்சியாக அடுத்த 50 ஆண்டுகளுக்கு இருக்க வேண்டும் என நினைத்தால், உள்கட்சித் தேர்தலே வேண்டாம்.

ஆனால், கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்றால், கட்டாயம் உள்கட்சித் தேர்தலானது மிகவும் அவசியமான ஒன்றாகும். காங்கிரஸ் கட்சியின் முக்கியமான 23 மூத்த தலைவர்கள், எம்பிக்கள் உள்ளிட்டப் பலரும் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருந்தனர். அதில், கட்சியினை வலிமைப்படுத்தவும், கட்சியில் இருப்பவர்களை உற்சாகப்படுத்தவும், உள்கட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்றுக் கூறியிருக்கின்றனர்.

HOT NEWS