குல்புஷன் ஜாதவ் வழக்கில் பாகிஸ்தான் விதிகளை மீறியுள்ளது! சர்வதேச நீதிமன்றம்!

31 October 2019 அரசியல்
Kulbhushanjadhav.jpg

பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்தியரான குல்புஷன் ஜாதவின் விவகாரத்தில், பாகிஸ்தான் சர்வதசே சட்ட விதிகளை மீறியுள்ளதாக, சர்வதேச நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்தியாவின் முன்னாள் கடற்படை வீரரான குல்புஷன் ஜாதவிற்கு, மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது பாகிஸ்தான் இராணுவ நீதிமன்றம். இதனையடுத்து, அவர் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, அவருக்கு வழங்கியத் தண்டனையை ரத்து செய்யக் கோரி சர்வதேச நீதிமன்றத்தினை நாடியது இந்தியா.

இந்நிலையில், இந்தியாவின் கோரிக்கையை ஏற்று, குல்புதீன் ஜாதவின் மரண தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க, சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், குல்புஷன் ஜாதவ்விற்கு வழங்கப்பட்டு இருந்த மரண தண்டனை நிறைவேற்றப்படாமல், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இதனிடையே, தற்பொழுது குல்புஷன் வழக்கில் சட்ட விதிகளை பாகிஸ்தான் அரசு மீறியுள்ளதாக, சர்வதேச நீதிமன்றத்தின் தலைவர் அப்துல்குவாய் யூசப் தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், வியன்னாவின் ஆர்டிகல் 36 விதியினை பாகிஸ்தான் அரசாங்கம் மீறியுள்ளது என்றும், அதற்கு அவர்கள் பதிலளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, மரண தண்டனையை தடுத்த இந்தியாவிற்கு, இது மேலும் ஒரு வெற்றியாகப் பார்க்கப்படுகின்றது.

HOT NEWS