வேல் யாத்திரைக்கு சென்ற குஷ்பு கார் விபத்துக்குள்ளானது! குஷ்பு எஸ்கேப்!

18 November 2020 அரசியல்
kushbuaccident.jpg

பாஜக நடத்தி வருகின்ற வேல் யாத்திரைக்கு சென்ற நடிகையும், பாஜக அரசியல் பிரமுகருமான குஷ்புவின் கார் விபத்துக்குள்ளானது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் சேர்ந்த குஷ்பு, மீது பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர். பலர் கிண்டல் செய்தும், கேலி செய்தும் இணையத்தில் மீம்ஸ்கள் உள்ளிட்டவைகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில், பாஜக தற்பொழுது வேல் யாத்திரையினை, தமிழகம் முழுவதும் நடத்தி வருகின்றது. இதில், பல பாஜகவினர் தமிழக அரசின் தடைகளை மீறி கலந்து கொண்டு வருகின்றனர்.

இதில் கலந்து கொள்வதற்காக, சென்னையில் இருந்து மதுராந்தகம் வழியே கடலூர் சென்ற குஷ்புவின் காரானது, அவர்களுடையக் காருக்கு முன்னாள் சென்ற கண்டெய்னர் லாரியின் மீது மோதியது. இதில், குஷ்புவின் காரின் பின் பக்க கதவானது சேதமடைந்தது. இந்த விபத்தில், குஷ்புவிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இது குறித்து பேசிய குஷ்பு, தன்னுடையக் கணவர் முருகன் மீது வைத்துள்ள பக்தியும் நம்பிக்கையும் இப்பொழுது கண்டேன். அவரே எங்களைக் காப்பாற்றி உள்ளார்.

இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. நாங்கள் பாதுகாப்பாக இருக்கின்றோம். இதற்காக கடவுளுக்கு நன்றி. அவரே எங்களைக் காப்பாற்றி உள்ளார் என்றுத் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

HOT NEWS