இயக்குநர் இமயம் பாரதி ராஜாவினைத் தெரியாதவர்கள் என, யாரும் இல்லை. அவர் செய்யாத சாதனைகளும் இல்லை. அவர் திரைப்பட இயக்குநராக மட்டுமின்றி, நல்லதொரு நடிகராகவும் உள்ளார்.
அவருடைய கனவுத் திரைப்படமாக குற்றப்பரம்பரை திரைப்படம், இன்று வரையிலும் கனவாகவே இருந்து வருகின்றது. இருப்பினும், அந்தப் படத்திற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் நிலவி வருவதால், அப்படத்தினை அவரால் உருவாக்க இயலவில்லை. தற்பொழுது, இந்தியாவில் ஆன்லைன் சீரிஸ் மிகப் பிரபலமாகி வருவதால், அவைகளில் இந்தக் குற்றப் பரம்பரை கதையானது, சீரீஸாக வெளியாக உள்ளது.
இதில், பாரதி ராஜா நடிக்க உள்ளார். இது பற்றிய புகைப்படங்கள் தற்பொழுது, இணையத்தில் வெளியாகி வருகின்றன. இந்தக் குற்றப்பரம்பரைப் படத்தினை இயக்குநர் பாலா இயக்கவும் ஏற்கனவே விருப்பம் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.