சூர்யா நடிப்பில், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் கேவி ஆனந்த் இயக்கத்தில் 2012ல் வெளியான திரைப்படம் மாற்றான். இதில் சூர்யா, ஒட்டிப் பிறந்த இரட்டைச் சகோதரர்களாக நடித்திருந்தார். அப்படம் மாபெரும் தோல்வியைத் தழுவியது.
இது குறித்து, தற்பொழுது மனம் திறந்து பேசியுள்ளார் அப்படத்தின் இயக்குநர் கேவி ஆனந்த். இது குறித்து அவர் தனியார் நிறுவனத்திற்கு அளித்தப் பேட்டியில், சிவாஜி படத்தில் வருகின்ற ஒரு கூடை சன்லைட் பாடல் (ஸ்டைல் பாடல்) சூட்டிங் முடித்துவிட்டு, விமானத்தில் வந்து கொண்டிருந்த பொழுது, ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரர்களின் கதையைப் படித்தேன். அக்கதை மிகவும் என்னைக் கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து, அதனைப் படமாக்க முடிவு செய்தேன்.
இருப்பினும், அந்தக் கதை, பழிவாங்கும் விதமாக முடிந்து இருந்தது. பல நூறு படங்களாக, இந்த பழிவாங்கும் படலம் இருப்பதால், நான் அதை மாற்ற முடிவு செய்தேன். அதற்காகத் தான் இறுதியில், சூர்யாவின் தந்தை நீ ஒரு பெய்லியர் ப்ராஜெக்ட் என்று கூற வைத்தேன். திரைக்கதைப் பலவீனமாக இருந்ததால், மக்கள் அப்படத்தை நிராகரித்துவிட்டனர் என்று கூறியுள்ளார். சார் ஒரு சந்தேகம், இந்தக் காப்பான் படத்தின் திரைக்கதை எப்படி?