கியார் புயல்! ரெட் அலர்ட்!

26 October 2019 அரசியல்
cyclone.jpg

கியார் புயல் தீவிரமடைந்துள்ளதால், இந்தியாவின் பல மாநிலங்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வு நிலையாக இருந்த வந்த நிலையில், தற்பொழுது புயலாக மாறியுள்ளதற்கு கியார் என்றுப் பெயர் வைத்துள்ளது, இந்திய வானிலை ஆய்வு மையம்.

இந்த கியார் புயலால், மஹாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா மற்றும் கோவா போன்ற மாநிலங்களில் கனமழை பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. தற்பொழுது கிடைத்துள்ள தகவலின் படி, இந்தப் புயல் அதிதீவிரப் புயலாக மாறியிருப்பதாகவும், மேலும், இதன் வேகம் 110 கிலோ மீட்டர் வேகமாக இருக்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் கரையை கடக்கும் பொழுது, மஹாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்தில் கடும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கருதப்படுகின்றது. இதனை முன்னிட்டு, மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என, அறிவுறுப்பட்டுள்ளது.

HOT NEWS