எல்லையில் இருந்து பின்வாங்கும் சீனா-இந்தியா! அமைதி திரும்புமா?

24 June 2020 அரசியல்
chinesearmy.jpg

உயர்மட்ட அளவில் நடைபெற்ற பேச்சு வார்த்தையினைத் தொடர்ந்து, இந்தியா சீனா இடையில் நிலவி வந்தப் பதற்றம் ஒரு வழியாக முடிவிற்கு வந்துள்ளது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், கடந்த மே5ம் தேதி முதல், மோதல் ஏற்பட்டு வந்தது. கல்வான் பள்ளத்தாக்கினைத் தங்களுக்கு சொந்தமானது எனக் கூறிய சீன அரசாங்கம், அங்கு தன்னுடையப் படைகளை நிறுத்தியது. இதனால், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் பதற்றம் அதிகரித்தது. அங்கு, தன்னுடைய இராணுவத்தினை, சீனா குவிக்க ஆரம்பித்தது. இருப்பினும், அதனை ஏற்க மறுத்த இந்திய அரசு, தன்னுடைய இராணுவத்தினை அங்கு நிறுத்தியது.

அப்பகுதியில், இருந்த இந்திய இராணுவத்தினருக்கும், சீன இராணுவத்தினருக்கும் இடையில் கடந்த ஜூன் 15ம் தேதி நள்ளிரவு மோதல் ஏற்பட்டது. அதில், இந்திய வீரர்கள் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் உருவாகி உள்ளது. இந்த சூழ்நிலையில், இரு நாட்டின் தரப்பிலும் இருந்து, உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதன்படி, லடாக் பகுதியில் உள்ள தங்களுடையப் படைகள் திரும்பப் பெறுவதாக ஒப்புக் கொண்டனர். இதனால், இரு நாடுகளுக்கு இடையிலும் உள்ள போர் பதற்றம் தற்பொழுது தணிய ஆரம்பித்து உள்ளது.

HOT NEWS