இன்று முதல் மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு!

08 November 2019 அரசியல்
meenakshiladu.jpg

இன்று முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.

உலகளவில் பிரசித்திப் பெற்ற சிவாலயமாக இருப்பது, மதுரை மீனாட்சி அம்மன் கோவில். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், அம்மனையும், சொக்கநாதரையும் வணங்கி வழிபடுகின்றனர். உண்டியல் காணிக்கையாகவும் பல ரூபாய்களை வழங்குகின்றனர்.

தற்பொழுது, இங்கு வரும் பக்தர்களில், 3 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக பால் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், இக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதன் படி, வெளி மாநிலங்களில் இருந்து ராட்சத அடுப்புகள் வைக்ப்பட்டன. மேலும், தீயணைப்புத் துறையின் அனுமதியும் கிடைத்ததை அடுத்து, லட்டுத் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. ஒரு நாளைக்கு 20,000 லட்டுகளை, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிகழ்ச்சியானது இன்று தொடங்குகின்றது. இந்த திட்டத்தினை தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்ப்ரன்ஸிங் மூலம் தொடங்கி வைத்தார். பக்தர்கள் இக்கோவிலுக்கு அதிகம் வருவதால், விரைவில் அனைவருக்கும் ஒரு லட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது. சுமார் 30 கிராம் எடையுள்ள லட்டு வழங்கப்பட உள்ளது.

இனி வரும் காலங்களில், லட்டு வழங்கும் அளவும், லட்டின் அளவும் அதிகரிக்கப்படும் என்று கூறப்படுகின்றது. மீனாட்சி சன்னதியில் அம்மனை தரிசித்த பின், வெளியே வரும் பொழுது லட்டு ஸ்டால் மூலம் இலவச லட்டு வழங்கப்படுகின்றது.

HOT NEWS