மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இனி லட்டு இலவசம்! கோயில் நிர்வாகம் அறிவிப்பு!

13 September 2019 அரசியல்
meenakshiladu.jpg

உலகளவில் பிரசித்தப் பெற்ற சைவத் திருத்தலமாக இருப்பது, மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வரர் ஆலயம். பல்லாயிரம் சிலைகளைக் கொண்ட இந்தய ஆலயம், வரலாற்று சிறப்புமிக்கது. இதனை திருமலை நாயக்கர், பெரிய அளவில் கட்டி முடித்தார்.

அப்பொழுதில் இருந்து, இன்று வரை கம்பீரமாக நிற்கும் இக்கோயில், இந்திய அளவில் சுத்தமாக உள்ள கோயில்களில், இரண்டாவது இடத்தினைப் பிடித்து அசத்தியது. தற்பொழுது வரை, அங்கு தினமும் ஆயிரக் கணக்கானப் பக்தர்கள் வந்து, சாமி தரிசனம் பெறுகின்றனர். இதனை முன்னிட்டு, கோவில் தக்கர் கருமுத்துக் கண்ணன் புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, இனி, வரும் தீபாவளி முதல், மீனாட்சி அம்மனை தரிசிக்க வரும் அவருடையப் பக்தர்களுக்கு, ஒரு லட்டு பிரசாதமாக வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.

ஏற்கனவே, அங்கு தரிசிக்க வரும் பக்தர்களில், மூன்று வயதுக்கும் குறைவான வயதுள்ளக் குழந்தைகளுக்கு, இலவசமாக பால் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்பொழுது இலவசமாக லட்டு வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

HOT NEWS