தோர் படத்தின் நாயகி தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளார். அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தின் வசூல் சாதனையை ஒட்டி, மார்வெல் பேஸ் 4 என்ற புதிய திட்டத்தை மார்வெல் சினிமாட்டிக் யூனிவர்ஸ் நிறுவனத்தின் தலைவர் கெவின் பீஜ் அறிவித்தார். அதன்படி, தோர் திரைப்படத்தின் நான்காம் பாகத்தில், தோரைப் போன்ற மற்றொரு நடிகையை அறிமுகப்படுத்துகின்றனர். அந்தக் கதாப்பாத்திரத்தில், நட்டாலி போர்ட்மேன் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
வரும் 2011ம் ஆண்டு வெளியாக உள்ள தோர் லவ் அண்ட் தண்டர் திரைப்படத்தில் இந்தக் கதாப்பாத்திரம் அறிமுகமாக உள்ளது. இந்தத் திரைப்படத்தினை, டைகா வைட்டி என்ற இயக்குநர் இயக்க உள்ளார்.
இத்திரைப்படம் தோர் பட வரிசையில் நான்காவது திரைப்படமாகும். மற்ற கதாப்பாத்திரங்களான தோர் மற்றும் வால்கைரீ ஆகியோரும், இந்தத் திரைப்படத்தில் உள்ளனர்.