இறுதிச் சடங்கில் லட்சக்கணக்கானோர் அஞ்சலி! அதிபர் கண்ணீர்!

07 January 2020 அரசியல்
qassemsoleimanifuneral.jpg

அமெரிக்க இராணுவத்தினால் சுட்டுக் கொல்லப்பட்ட, ஈரான் நாட்டு தளபதி குவாசிம் சுலைமானியின் உடலானது, நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில், லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

பாக்தாத் நகரின் விமா நிலையத்திற்கு அருகே, ஈரான் நாட்டின் முக்கிய தளபதியான குவாசிம் சுலைமானியின் மீது, அமெரிக்க டிரோன்கள் திடீர் தாக்குதல் நடத்தின. அதில், சுலைமானி உட்பட ஒன்பது சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனையடுத்து, ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே, போர் மூலும் சூழல் உருவாகி உள்ளது.

இதனிடையே, நேற்று ஈரான் நாட்டின் டெஹ்ரானில் உள்ள பல்கலைக் கழகத்தில், பொதுமக்களின் அஞ்சலிக்காக குவாசிம் சுலைமானியின் உடல் வைக்கப்பட்டது. அங்கு யாரும் எதிர்பாராத வகையில், பல லட்சக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். அங்கு அவருடைய உடலினைக் கண்ட பின், கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர். மேலும், அமெரிக்கா ஒழிக, டிரம்ப் ஒழிக என்ற கோஷத்தினையும் எழுப்பின.

ஈரான் நாட்டின் மூத்த மத குருவான, அயதுல்லா அலி காமெனி தலைமையில், சுலைமானியின் உடலுக்கு இறுதி சடங்குகள் நடைபெற்றன. அதில், அயதுல்லா அலி கதறி அழ ஆரம்பித்து விட்டார். இதனைப் பார்த்தவர்களும், கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்து விட்டனர். இதற்குப் பின், பொதுமக்களுக்கு இடையில், அவருடைய உடலானது வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. தன் தந்தையுடன் அனைத்தும் முடிந்துவிட்டது என கனவிலும் எண்ணிவிடாதீர்கள் என, குவாசிம் சுலைமானியின் மகள் சீயிநாப் சுலைமானி எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவுடன் 2015ம் ஆண்டு செய்து கொண்ட அணு ஒப்பந்தத்தினை, ஈரான் தற்பொழுது பின்வாங்கியுள்ளது. இவைகளுக்கு எல்லாம் மேலாக, தன்னுடைய நாட்டில் உள்ள படைகளை எல்லாம், உடனடியாக வெளியேறும் படி அமெரிக்காவிற்கு ஈராக் கூறியுள்ளது. இதற்காக, நேற்று முன்தினம் நடைபெற்ற ஈராக் நாடாளுமன்றக் கூட்டத்தில், தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால், எங்களுடையப் படைகளை வெளியேற்ற இயலாது என, அமெரிக்க அதிபர் அறிவித்துள்ளார்.

பல ஆயிரம் டாலர்கள் செலவில் நாங்கள் விமானதளங்களை கட்டியுள்ளோம் எனவும், அதற்கானப் பணத்தினை அளித்தால் தான் செல்வோம் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

HOT NEWS