நடிகர் அஜித்குமார் ஒரு ஜென்டில் மேன் என, நடிகை லட்சுமி மேனன் கூறியுள்ளார்.
வேதாளம் படத்தில், அஜித்குமாரின் தங்கையாக நடித்த நடிகை லட்சுமி மேனன் அதற்குப் பிறகு, பெரிய அளவில் சினிமாவில் நடிக்கவில்லை. அவர் தற்பொழுது, பரதம் உள்ளிட்ட விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டி வருகின்றார். அவர் தற்பொழுது தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் புதிய தகவல் ஒன்றினை வெளியிட்டு உள்ளார். அதில், நடிகர் அஜித்குமாருடன் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை.
என்னுடைய ஆசை நடிகர் அஜித்துடன் நடிக்க வாய்ப்பு வழங்கிய சிவா சாருக்கு நன்றி என, அவர் கூறியுள்ளார். கும்கி படத்தில் அறிமுகமான நடிகை லட்சுமி மேனன் தற்பொழுது கௌதம் கார்த்திக் நடிப்பில், முத்தையா இயக்கும் படத்தில் இணைந்துள்ளார். இதனிடையே, இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.