நடிகை வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்ற நபரை, 3வதாக திருணம் செய்து கொண்டார். இது இன்னும் சட்டப்படி கூட அங்கீகாரம் பெறவில்லை. ஆனால், அதற்குள் அவருக்கு தலைக்கு மேல் பிரச்சனைகள் ஓட ஆரம்பித்து விட்டன. பீட்டர் பால் தன்னுடைய முதல் மனைவியினை விவாகரத்து செய்யாத காரணத்தால், வனிதா விஜயகுமார் திருமணம் செல்லாது என்றுப் பலர் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், சொல்வதெல்லாம் உண்மை போன்ற நிகழ்ச்சிகள் மூலம், கணவன் மனைவியிடையே பஞ்சாயத்து செய்து வரும் லட்சுமி ராமகிருஷ்ணனிடம், பீட்டர்பாலின் முதல் மனைவி உதவி கோரினார். அதற்காக, பிஹைண்ட்வுட்ஸ் சேனல் மூலம் வனிதாவும், லட்சுமி ராமகிருஷ்ணனும் இணைய வழியில் தொடர்பு கொண்டனர். அதில், லட்சுமி ராமகிருஷ்ணனை வனிதா விஜயகுமார் தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்துவிட்டார்.
மேலும், லட்சுமி ராமகிருஷ்ணனின் கணவரையும் கிழித்து விட்டார். இதனால், அவர் மீது தற்பொழுது, குற்றவியல் மற்றும் உரிமையியல் சட்டத்தின் கீழ் வனிதாவிற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
அடுத்த ஏழு நாட்களுக்குள் நஷ்ட ஈடாக ஒன்றரேகால் கோடி தர வேண்டும் அல்லது, நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று கூறப்பட்டு உள்ளது. அதற்கு தற்பொழுது தன்னுடைய வக்கீல் மூலம், பதில் வக்கீல் நோட்டீஸினை வனிதா விஜயகுமார் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு அனுப்ப உள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், என்னை மிரட்டி ஒன்றேகால் கோடி கேட்கின்றார். அதற்காக, நான் என்னுடைய வக்கீல் நோட்டீஸை அனுப்ப உள்ளேன் என்றுக் கூறியுள்ளார்.