திருச்சியில் புதைக்கப்பட்ட நகைகள்! போலீசார் அதிர்ச்சி!

18 October 2019 அரசியல்
lalaithajewellerymurugan.jpg

திருச்சியில் உள்ள, லலிதா ஜீவல்லரியில் நடைபெற்ற நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய, முருகன் பதுக்கி வைத்திருந்த நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தற்பொழுது போலீஸ், முருகன் மற்றும் சுரேஷ் ஆகியோரை, தனித் தனியாக இரகசியமான இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், முருகன் தன்னுடைய பங்கான சுமார் 12 கிலோ எடையுள்ள, 4 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருச்சியில் உள்ள திருவெறும்பூர் பகுதியில் உள்ள ஒரு காட்டில் பதுக்கி வைத்திருந்ததாக கூறினான்.

இதனை அடுத்து, அவனை அழைத்துக் கொண்டு, கர்நாடகப் போலீசார் தமிழகம் வந்தனர். அவன் கூறிய இடத்தில் நகையை தோண்டி எடுக்கக் கூறினர். இதனையடுத்து, முருகன் நகையினைத் தோண்டி எடுக்க ஆரம்பித்தான். சரியாக இரண்டு அடித் தோண்டியதும், அவன் புதைத்து வைத்த நகைப் பையினை பார்த்தான். பின்னர், அதனை வெளியே எடுத்துப் போலீசாரிடம் கொடுத்தான். இதனைப் போலீசார் வீடியோ எடுத்துக் கொண்டு இருந்தனர். முருகன் இவ்வாறு நகை எடுப்பதை ஆர்வமுடன் பார்த்து வந்த போலீசார், அவன் செயல்களைக் கண்டு திகைத்துப் போயினர்.

HOT NEWS