சுரேஷும் நகைகளைப் பதுக்கி வைத்துள்ளார்! தனிப்படை விரைகின்றது!

20 October 2019 அரசியல்
lalaithajewellerysuresh.jpg

லலிதா ஜூவல்லரியில் நடைபெற்ற, நகைக் கொள்ளையில் திருடிய நகைகளை திருவண்ணாமலைப் பகுதியில், குற்றவாளிகளில் ஒருவரான சுரேஷ் தெரிவித்துள்ளார்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள லலிதா ஜூவல்லரியில், நூதன முறையில் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் எளிதாகப் பிடித்துவிட்டனர். கொள்ளையில் ஈடுபட்ட மணிகண்டன், சுரேஷ் மற்றும் முருகன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

முருகனிடம் தீவிர விசாரணை நடத்தியப் போலீசார், திருச்சியில் முருகனால் காட்டுப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நகைகளை, மீட்டனர். சுமார் 12 கிலோ எடையுள்ள தங்களை நகைகளை மண்ணிற்குள் புதைத்து வைத்திருந்ததாக, முருகன் ஒப்புதல் வாக்குமூலம் கூறியுள்ளான்.

இந்நிலையில், திருட்டில் ஈடுபட்ட சுரேஷிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களுடைய விசாரணையில், தான் திருடிய நகைகளை திருவண்ணாமலையில் ஒரு இடத்தில் பதுக்கி வைத்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளான். இதனை எதிர்பாராத போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனை முன்னிட்டு, சுரேஷினை அழைத்துக் கொண்டு, திருவண்ணாமலைக்குச் சென்று, பதுக்கி வைக்கப்பட்டுள்ள நகைகளை மீட்டு வர தனிப்படை செல்ல உள்ளது.

HOT NEWS